முன்னுரை
நவீன விஞ்ஞானிகள் ஒவ்வொரு கூற்றையும் பரிசோதித்து நிரூபிக்கப்பட்ட உண்மையென ஒப்புக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ள மக்களை இந்நூல் விழிப்படையச் செய்யும். “உயிர் உயிரிலிருந்து தோன்றுகிறது” (LIFE COMES FROM LIFE) எனும் இந்நூலில் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவஞானிகள் மற்றும் அறிஞர்களுள் ஒருவரான தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்கள், நவீன விஞ்ஞானமும் விஞ்ஞானிகளும் கொண்டுள்ள மேலோங்கிய கருத்துக்களையும், கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் மிகச்சிறந்த ஆனால் எளிய முறையில் விமர்சிக்கிறார்.
உயிரின் தோற்றுவாய் மற்றும் நோக்கத்தைப் பற்றி இன்று நிலவும் நாகரிகக் கொள்கைகளின் அடித்தளத்தில் மறைந்துள்ள முற்றிலும் ஆதாரமற்ற அனுமானங்களை ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் தமது தெளிவான வாதங்கள் மூலம் தகர்க்கிறார்.
1973-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஸ்ரீல பிரபுபாதர் தம் காலை உலாக்களின் போது சீடர்கள் சிலருடன் நிகழ்த்திய உரையாடல்களின் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளது. (உரையாடல்கள் டேப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தன) விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட உரையாடல்களின்போது ஸ்ரீல பிரபுபாதர் பெரும்பாலும் தம் சீடர் டாக்டர் தௌடம் டி.சிங்குடன் பேசினார். உயிர்ப்பொருள் ரசானியான டாக்டர் சிங் தற்போது பக்திவேதாந்தக் கழகத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார். இந்நிறுவனம் விஞ்ஞானம், தத்துவம், மத சாஸ்திரம் ஆகிய துறைகளில் முதுநிலை ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள சர்வதேச மையமாக விளங்குகிறது.
உலகின் எப்பகுதியிலிருந்தாலும் ஸ்ரீல பிரபுபாதர் ஒவ்வொரு நாளும் அதிகாலையின் குளிர்ந்த மௌன வேளையில் வெதுவெதுப்பான ஆடையைப் போர்த்திக் கொண்டு, தம் சில மாணவர்கள், சீடர்கள். சிறப்பு விருந்தினர்கள் ஆகியோருடன் நண்டதூரம் உலாவுவது வழக்கம். அப்போது அவர்களுடன் அவர்உயிரிலிருந்து உயிர் தோன்றுகிறது
அன்யோன்யமாகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. சிலாக காலையில் அவர் இயற்கைச் சூழலின் அமைதியையும் அழகை ரசிப்பதில் மூழ்கிவிடுவதால் உரையாடுவது மிகக் குறைந்துவிடும் மம் நேரங்களில் அவர் பல விஷயங்களைப் பற்றி மிக நீளமாகவம் ஆழமாகவும் பேசுவார். ஆர்வம் மிக்க இவ்வுரையாடல்களின் போக தத்துவ ஆராய்ச்சி என்பது சாரமற்ற, சிக்கலான விஷயமல்ல, மாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாகப் பிரித்துக் காணவல்ல சக்தி வாய்ந்த செயல்முறை என்பதை அவர் நிரூபித்தார் அவரது கூரிய அறிவு, ஆழ்ந்த ஆன்மீக நோக்கு, மற்றும் அசாதாரணமான நகைச்சுவைக்கு உட்படாத பொருள் எதுவும் இருக்கவில்லை. மேலெழுந்தவாரியாகவும், பிடிவாதமான கொள்கைகளின் அடிப்படையிலும் சிந்திப்பதைத் தவிர்த்த அவர், தம் மாணவர்களுக்குக் கல்வி புகட்டியும், சவால் விடுத்தும் அவர்களை ஊக்குவித்தும், வசீகரித்தும், மிகக் கவனமாக மேலும் உயர்ந்த கண்ணோட்டமும் அறிவும் பெறும் வகையில் அவர்களை வழிநடத்திச் சென்றார்.
ஸ்ரீல பிரபுபாதர் (1896 – 1977) எல்லா நாட்டினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நூலாசிரியர், அறிஞர், ஆன்மீக வழிகாட்டி, இந்தியாவின் கலாசார தூதராக உலகெங்கிலும் மதிக்கப்படுபவா. “உயிர் உயிரிலிருந்து தோன்றுகிறது” என்ற இந்நூலில் ஸ்ரீல பிரபுபாதி ஒரு சிறந்த தத்துவஞானியாகவும் சமுதாய விமர்சகராகவும் திகழ்கிற நவீன விஞ்ஞானத்தில் அணுகுமுறையிலுள்ள குறைபாடுகளை பரிசீலிக்கப்படாத மனச் சார்புகளையும் மட்டுமின்றி, விஞ்ஞான தம்மை நம்பும் பொது மக்களின் முன்பு உண்மைகள் என்ற வடி வைக்கும் பரிசோதிக்கப்படாத ஹேஷ்யங்களையும் தத்துவரீதியிலான கண்டிப்புடனும், – பொது அறிவுடனும், ஒளிவுமறைவின்றி அவர் அம்பலப்படுத்தல்
வாக, பூல பிரபுபாதர் விஞ்ஞானம் என்ற போர்வையில் நாகரிக உலகை வெகுவாக மயக்கி வரும் பௌதிகவாத சூன்யவாதம் ஆகிய கட்டுக் கதைகளின் வசியத்தைத் தகாக
(பரிசோதிக்கவியலாத
டனும், ஆழ்ந்த லப்படுத்துகிறார்.
வயில் நவீன
பளதிகவாதம் மற்றும்
பயத்தைத் தகர்க்கிறார்.
– பிரசுரிப்பாளர்கள்
johar (verified owner) –
easy to understand and read.
krishna (verified owner) –
Very well worth the money.
johar (verified owner) –
Good service.
anuj (verified owner) –
Very useful
Anjum P (verified owner) –
Very fast delivery.
shyam (verified owner) –
Good quality.
priyanka (verified owner) –
Good quality.